மரணம் தேடியே மடியில் சாய்கிறான்
மழலையில் கல்லாமை குற்றம்
இளமையில் யாசித்தல் குற்றம்
முதுமையில் பேராசை குற்றம்
அந்தணர் திராவிடர் என் பிரித்து வாழ்தல் குற்றம்
தன்னலம் காக்க பிறரை பழித்தல் குற்றம்
காதலை ஒதுக்குதல் குற்றம்
நம்பிக்கை உடைத்தல் குற்றம்
நண்பனை மறத்தல் குற்றம்
நம்பியவர் கை உதருதல் குற்றம்
ஆண்மை தவர்தல் குற்றம்
அறநீதி தவிர்த்தல் குற்றம்
இறைவனை மறத்தல் குற்றம்
பிற உயர் வறுத்தல் குற்றம்
பணத்தின் மேல் மோகம் குற்றம்
தீமை கண்டு மௌனம் காத்தல் குற்றம்
நடைபிணமாய் வாழ்தலும் குற்றம்
ஆபத்தில் உதவமை குற்றம்
இதனிலும்
மனிதனாய் பிறந்தல் குற்றம்
எனவே
மரணம் தேடியே மடியில் சாய்கிறான்
பாவப்பட்ட மண்ணோடு...!
வாசிப்பதற்கு நன்றி கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்தை சொல்லுங்கள் ...
வாசிப்பதற்கு நன்றி கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்தை சொல்லுங்கள் ...
குற்றங்களை குற்றமில்லாமல் வகைப்படுத்தியமைக்கு பாராட்டுகள்
ReplyDeleteதண்டிக்கத் தக்கவையே குற்றங்கள்!
ReplyDeleteநிதிக்கு நீதியை விற்பதுவும்
சதிக்கு உடந்தை யாவதுவும்
விதியே யெனவீழ்ந்து கிடப்பதுவும்
மதிக்கெதி ராய்கொலை செய்துவரும்
குற்ற மன்றோ கூறு !
This is the best of yours Nandha.!! Keep writing lots !!
ReplyDelete