Saturday, 1 July 2017

ஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள்

ஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள் 

பெருசா ஒன்னுமில்லைங்க நம்ம தாத்தா காலத்து வழிமுறைதான்.

1. வெளியில் செல்லும்போது குடிதண்ணீர் பாட்டிலில் எடுத்து செல்லவும். 
2. பயணத்தின் போது புலி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால்   வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லவும் ( டப்பால கட்டுங்க கவர்ல கட்டின ஜி எஸ் டி வரும் ) 
3. அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூட இல்லேன்னா மஞ்ச பை எடுத்திட்டு பொய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை ஜாமான் வாங்குங்க .
4. வார இறுதி நாட்களில் வீட்லயே குடும்பத்தோட ஏதவது ஸ்பெசல் உணவு தயார் செய்து சாப்பிடுங்க.
5. திரைப்படத்தை  multiplex  அல்லாத திரையரங்குகளில் பாருங்க 
6. விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாம பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம் .
7. காலைல நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்க .
9. பழைய  பழக்கங்கள் போல , நன்பர்கள் டூர் போனால் , நண்பர்கள் எவராவது ஒரு வீட்டில் தங்குங்கள் 
10. சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக வேலையே செய்ய முயற்சி பண்ணலாம் .

இப்படி செய்தால் 
உடல் ஆரோக்கியமாகும் .
மிகப்பெரும் பணம் மிச்சமாகும் .
சொந்தம் பெருகும் 
மனைவி கணவன் பாசம் , அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும் .
நட்பு வட்டங்கள் உண்மையாகும்.

உண்மையான பழைய இந்தியா மீண்டும் பிறக்கும்!!

No comments:

Post a Comment

Featured post

Bigg Boss Tamil Season 2 Contestants List 2018