சினிமா சமீப காலமாக மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகின்றது. ஏற்கனவே திருட்டு விசிடி, ஆன்லைனில் படங்கள் வருவது என ஒரு பக்கம் கடும் வீழ்ச்சியை சந்திக்க, மறுப்பக்கம் கேளிக்கை வரியால் திரையரங்கையே இழுத்து மூடும் நிலைமை உருவாகியுள்ளது. இதில் பெரிய நடிகர்கள் படங்களும் முன்பு போல் எதுவுமே பெரிய வெற்றியடைவது இல்லை.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் படங்களில் அதிக நஷ்டத்தை கொடுத்த படங்கள் எது என்பதை பார்ப்போம்..
லிங்கா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வந்த கபாலி கூட தமிழகத்தில் எதிர்ப்பார்த்த வசூல் இல்லை தான், இருந்தாலும் சமாளிக்கக்கூடிய நஷ்டம் தான் ஏற்பட்டது, ஆனால், லிங்கா தான் ரஜினியின் திரைப்பயணத்திலேயே பெரும் நஷ்டத்தை கொடுத்த படம்.
உத்தம வில்லன்
கமலை பொறுத்தவரையில் சமீப காலமாக சிறு பட்ஜெட் படங்களில் தான் நடித்து வருகின்றார், அப்படியிருந்தும் அவர் மிகவும் ரிஸ்க் எடுத்தது உத்தம வில்லனில் தான், இப்படம் சொன்ன தேதியில் வந்திருந்தாலே ஓரளவிற்கு வசூல் வந்திருக்கும், ஆனால், ஒரு நாள் கழித்து இப்படம் ரிலிஸானது பெரும் நஷ்டத்தை கொடுத்தது.
பில்லா-2
அஜித்தை பொறுத்தவரையில் கடைசியாக விவேகம் கூட தமிழகத்தில் நஷ்டம் தான் என கூறப்படுகின்றது, ஒரு சில பகுதிகளில் முதலுக்கு மோசமில்லை என்கின்றனர், இருந்தாலும் பெரியளவில் இப்படம் நஷ்டம் இல்லை, ஆனால், அஜித் நடிப்பில் மிக பிரமாண்டமாக வெளிவந்து பெரிய நஷ்டத்தை கொடுத்த படம் பில்லா-2 தான்.
புலி
விஜய் எப்போதும் மாஸ் மசாலா படங்களை தான் விரும்பி நடிப்பவர், ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகளுக்காக விஜய் நடித்த படம் தான் புலி, இப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்க, வியாபாரம் மட்டுமே ரூ 100 கோடியை தாண்டி நடந்தது. ஆனால், படத்தின் எதிர்மறையான விமர்சனம் வசூலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது, விஜய் திரைப்பயணத்தில் பெரும் நஷ்டம் புலி தான்.
மாற்றான்
சூர்யாவின் திரைப்பயணத்தில் பெரும் தோல்வி அஞ்சான் என்றாலும் அப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு செம்ம வசூலை ஓப்பனிங்கில் பெற்றது, அதனால், ஓரளவிற்கு குறைந்த நஷ்டம் தான், ஆனால், மாற்றான் பெரும் பொருட் செலவில் வெளிவந்த படம், அதனால் என்னவோ இப்படம் நஷ்டக்கணக்கில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.
10 எண்றதுக்குள்ள
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்த்து கந்தசாமி, தாண்டவம், பீமா என பல படங்கள் தோல்வியடைந்தாலும் 10 எண்றதுக்குள்ள தான் சமீபத்தில் அவரின் மிகப்பெரும் நஷ்டமடைந்த படம்.
இதேபோல் தனுஷிற்கு தங்கமகன், சிம்புவிற்கு AAA ஆகிய படங்கள் பெரும் நஷ்டத்தை கொடுத்த படங்கள். இவை அனைத்துமே நடிகர்கள் கடந்த சில வருடங்களில் மட்டும் கொடுத்த தோல்வியை வைத்து கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment